Jun 16, 2009

Winners of The Provincial Level School Sportsmeet

.15-06-2009 அன்று நடைபெற்ற மாகாண மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டிகளில் இதுவரை எமது கல்லூரி மாணவர்கள் மூவர் தேசிய மட்டத்திலான போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மஸி என்ற மாணவர் அதிக தூரம் பாய்ந்து புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். இம்மாகாண மட்டத்திலான போட்டிகளுக்கு எமது கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி சென்றிருந்தனர் என்பதும் சிறப்பம்சமாகும்.

இவர்களது போட்டி தொடர்பான விபரங்கள்:

Under 17 Long Jump
1st Place - Mazee (He hold a island wide new record - 6.58m, Old record - 6.5m)

Under 17 400M
1st Place - Amjath (time 55.4s)

Under 19 Disc throw
3rd Place - Mafaz (31m)

இவர்களது இச்சாதனைகளுக்கும், முயற்ச்சிகளுக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கல்லூரியின் கௌரவத்திற்கு பங்காற்றிய இவர்களை நாமும் கௌரவிப்பதோடு இவர்களது வளர்ச்சிக்கு எம்மாலான உதவிகளையும் செய்ய முன்வருவோம்.

Jun 6, 2009

Winners of The District Level School Sportsmeet

..
Under 17 Champions (District)
AC. Amjath (200m, 400m, 800m)
MU. Mazi (Long Jump, Triple Jump, 100m)

Selected for provincial meet
M. Asmin (1500m, 800m)
M. Mafas (Put shot)
M. Nimhal (Long Jump, 200m)
MA. Jaseer (Triple Jump)

கடந்த வாரம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாவட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரியைச் சேர்ந்த அம்ஜத், மஸி என்ற இரண்டு மாணவர்கள் சம்பியன் பட்டத்தை பெற்றதுடன் மேலும் 15 மாகாண மட்டத்திலான போட்டிகளுக்கு 5 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் கல்வி வலய மாணவர்களுக்கு இப்போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்த பெருமை காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களையே சார்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.