.

15-06-2009 அன்று நடைபெற்ற மாகாண மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டிகளில் இதுவரை எமது கல்லூரி மாணவர்கள் மூவர் தேசிய மட்டத்திலான போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் மஸி என்ற மாணவர் அதிக தூரம் பாய்ந்து புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். இம்மாகாண மட்டத்திலான போட்டிகளுக்கு எமது கல்லூரியிலிருந்து 15 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி சென்றிருந்தனர் என்பதும் சிறப்பம்சமாகும்.
இவர்களது போட்டி தொடர்பான விபரங்கள்:
Under 17 Long Jump1st Place - Mazee (He hold a island wide new record - 6.58m, Old record - 6.5m)
Under 17 400M1st Place - Amjath (time 55.4s)
Under 19 Disc throw3rd Place - Mafaz (31m)
இவர்களது இச்சாதனைகளுக்கும், முயற்ச்சிகளுக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கல்லூரியின் கௌரவத்திற்கு பங்காற்றிய இவர்களை நாமும் கௌரவிப்பதோடு இவர்களது வளர்ச்சிக்கு எம்மாலான உதவிகளையும் செய்ய முன்வருவோம்.