Jan 29, 2008

2005 Tamil Day (islamic section) - Island Winner


1 comment:

Anonymous said...

மிகவும் நல்லதொரு முயற்சி தொடர்ந்தும் இன்னும் சிறப்பாக இதைத் தொடர வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
எனது கல்லூரியின் பெருமையில் அக்கறை கொண்ட ஒருவன் என்ற வகையில் ஒரு சில ஆலோசனைகளை இவ் வலை நிர்வாகிக்குக் கூறவிரும்புகிறேன்.

01.நமது பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரிருந்து பாடசாலைக்கு ஏதேனும் பெருமையான செயல்கள் செய்தால் அவற்றைப்பதிந்து வரும் ஒரு விபரப் பதிவேடு இருக்கிறது. அதை எவ்வாறேனும் பெற்று இப்பதிவில் இடுவது ஒரு நல்ல ஆவணமாக மாறும் என நினைக்கிறேன்.

02.அத்தோடு மிகவும் புராதன புகைப்படங்களையும் இணைக்க முயலுங்கள்.

03.மேலும் இதுவரையான பாடசாலையின் கல்வி ரீதியான அடைவுகள் குறிப்பாக பல்கலைக்கழக நுழைவுகள் மற்றும் ஏனைய அடைவுகள் பற்றிய தரவுகளையும், அவற்றின் விபரங்களையும் மிக ஆரம்ப காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமான ஒன்றாக இப்பக்கத்தை ஆக்க முயலுங்கள்.
வெறுமனே நினைவுகளின் பதிவாக மட்டுமன்றி ஒரு ஆவணப்படுத்தலாக ஆகுவது ஆரோக்கியத்தை இன்னும் அதிகரிக்கும்.

04.நமது கல்லூரி பற்றிய நேரான முரணான விடயங்கள் பற்றிய உரையாடல்களைச் செய்வதற்கும் அது கல்லூரியில் தற்போதிருக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் வாசிக்கப்படுவதற்கும் அவர்களும் அத்தகைய உரையாடலில் பங்கெடுக்கவும் முயற்சியெடுங்கள்.

05.அத்தோடு ஒரு தகவலுக்காக..
அண்மையில்
"காத்தான்குடிக் கல்வி நிலை ஒரு மீள் வாசிப்பு" என்ற
ஒரு ஆய்வை வாசிக்கக் கிடைத்தது.
அதிலும் நமது கல்லூரி பற்றிய மிக விரிவான பார்வைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஒது போன்ற ஏராளமான நல்ல ஆய்வுகளும் கருத்துக்களும் நமது கல்லூரிபற்றி வெளிவந்திருக்கின்றன.
அத்தகைய தேடல்களையும் திரட்டிச் சேகரிப்பது இன்னும் பல உரையாடல்களுக்கும், நல்ல பணிகளுக்கும் வழிவகுக்கலாம்.

06.இறுதியாக ஒன்று கிடைக்கின்ற எல்லாப் புகைப்படங்களையும் ஏற்றுவதை விட ஞாபகங்களுக்காக ஓரிரு குழுப் புகைப்படங்களோடு நிறுத்திக்கொள்வது ஒரு பொதுவான தளத்துக்கு அழகானதாக இருக்கும். இல்லாவிட்டால் அதிகமாக தனிப்பட்ட புகைப்படங்களை இடுவதென்பது அனைத்து மாணவர்களுக்குமானது என்ற உரிமத்தை அர்த்தம் இல்லாததாக்கிவிடும்.
எனவே எதிர்காலத்திற்கு நல்ல ஆவணங்களாகவும் நினைவின் பதிவுகளாகவும் இருக்கும்படியான புகைப்படங்களை இடும் ஒரு எல்லையை வரையறுப்பது நல்லது.

(இவை என்னுடைய தனிப்பட்ட ஆலோசனைகளே)

நாம் அனைவருமே நமது கல்லூரியின் வளர்ச்சி நிலையில் பெருமைப்படவும் வீழ்ச்சிநிலையை சீர்தூக்கி விடவும் கட்டாயம் கடமைப்பட்டவர்கள்.